73. அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் கோயில்
இறைவன் ஆத்மநாதேஸ்வரர்
இறைவி ஞானாம்பிகை
தீர்த்தம் திருப்பாற்குளம், குடமுருட்டி
தல விருட்சம் ஆலமரம்
பதிகம் திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருவாலம்பொழில், தமிழ்நாடு
வழிகாட்டி தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் பாதையில் திருக்கண்டியூர் வந்து சிவன் கோயில் எதிரில் செல்லும் திருப்பூந்துருத்தி சாலையில் சென்றால் கண்டியூரிலிருந்து 5 கி.மீ. இக்கோயில் சாலையோரத்தில் அமைந்துள்ளது.
தலச்சிறப்பு

Tiruvalampozhil Gopuramமூலவர் 'ஆத்மநாதேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'ஞானாம்பிகை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், நடராஜர், காசி விஸ்வநாதர், நால்வர், நவக்கிரகங்கள் முதலானோர் தரிசனம் தருகின்றனர்.

காசியபர், அஷ்ட வசுக்கள் முதலானோர் வழிபட்ட தலம். கோயில் எதிரில் திருப்பாற்குள தீர்த்தம் உள்ளது.

திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com